மணல் கடத்திய 10 மாட்டுவண்டி உரிமையாளர்கள் மீது வழக்கு
மோகனூர்
மோகனூர் அருகே உள்ள குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்பாலப்பட்டி காவிரி ஆற்று பகுதிகளில் மணல் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மோகனூர் மண்டல துணை தாசில்தார் சக்திவேல் தலைமையில், வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் வருவாய் துறையினர் காவிரி ஆற்றுப்படுகையில் சோதனை செய்தனர். அப்போது 10 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மோகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாட்டுவண்டி உரிமையாளர்களான கீழ்ப்பாலப்பட்டியை சேர்ந்த பிரவீன் (வயது 25), கருப்பண்ணன் (55), லோகநாதன் (45), ராமச்சந்திரன் (32), பெரியசாமி (45), சேகர் (44), கர்ணன் (46), குமார் (48), சிவக்குமார் (43) உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் 10 மாட்டுவண்டிகள் மற்றும் 5 யூனிட் மணலையும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசாா் தலைமறைவான 10 மாட்டுவண்டி உரிமையாளர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.