மாவட்டத்தில்மது குடித்துவிட்டு வாகனங்களில் சென்ற 70 பேர் மீது வழக்கு
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவுப்படி மாவட்டத்தின் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சிறப்பு வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது போக்குவரத்து விதிகளை மீறி இரு சக்கர வாகனங்களை மது அருந்திவிட்டு ஓட்டிச் சென்றது தொடர்பாக மொத்தம் 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக 70 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 28 வழக்குகளும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக 27 வழக்குகளும், பணம் வைத்து சூதாடியது தொடர்பாக 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
Related Tags :
Next Story