குடிபோதையில் தகராறு; 2 பேர் மீது வழக்கு
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை கடைவீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான வளவன் என்ற கண்ணன் (27) என்பவர் குடிபோதையில் செந்தில்குமாரிடம் தகராறு செய்தார். பின்னர் பாட்டிலால் செந்தில்குமார் தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து செந்தில்குமார் பொம்மிடி போலீசில் புகார் கொடுத்தார்.
இதற்கிடையே கண்ணனின் தாயார் கொடுத்த புகாரில் தனது வீட்டில் புகுந்து டி.வி., பீரோ உள்ளிட்டவற்றை செந்தில்குமார் உடைத்ததாக கூறியுள்ளார். இருதரப்பின் புகாரின்பேரில் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், செந்தில்குமார், கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.