தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு


தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
x

தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை அருகே உள்ள பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 55). சிற்ப தொழில் செய்து வருகிறார். இவர் திருவாடானை அருகே உள்ள ஓரிக் கோட்டை கிராமத்தில் நல்லாத்துரை அய்யனார் கோவிலில் சிற்ப வேலையில் ஈடுபட்டு இருந்தாராம். அப்போது சிற்பியிடம் வேலை பார்த்ததற்கான கூலி கேட்டு உள்ளார். அப்போது அங்கிருந்த திருவாடானை மகேஸ்வரன் (50). சிற்பியின் தம்பி கண்ணன் (35) ஆகியோர் ராஜேந்திரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் மகேஸ்வரன், கண்ணன் ஆகிய 2 பேர் மீது திருவாடானை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story