கார்களை விற்ற 4 பேர் மீது வழக்குப்பதிவு
கார்களை விற்ற 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பேரையூர்,
போலி ஆவணங்கள் தயாரித்து கார்களை விற்ற 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கார்கள் விற்பனை
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி.தொட்டியபட்டியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 34). இவரிடம் சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த ராம்குமார் என்பவர் சொந்த வேலையாக வெளியூர் செல்வதற்காக காரை கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு குமரேசனும் தன்னுடைய காரை ராம்குமாரிடம் கொடுத்துள்ளார். இதேபோல் அதே ஊரை சேர்ந்த முருகன் என்பவரும் குமரேசனிடம் இருந்த மற்றொரு காரை வாங்கி சென்றுள்ளார்.
ஆனால் கார்களை வாங்கி சென்ற இருவரும் குமரேசனிடம் திரும்ப ஒப்படைக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் குமரேசன் அவர்கள் இருவரிடமும் கார்களை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். அப்போது ராம்குமார், முருகன் மற்றும் தொட்டியபட்டியை சேர்ந்த முத்துலட்சுமி, கமுதியை சேர்ந்த சண்முகநாதன் ஆகியோர் போலியான ஆவணங்கள் தயார் செய்து கார்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
வழக்குப்பதிவு
இதைக்கேட்டு அதிர்்ச்சி அடைந்த குமரேசன் இந்த சம்பவம் குறித்து பேரையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராம்குமார், முருகன், முத்துலட்சுமி, சண்முகநாதன் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.