வைகை கரையோரம் மணல் குவாரிக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி


வைகை கரையோரம் மணல் குவாரிக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி
x

வைகை கரையோரம் மணல் குவாரிக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆகிய தேவைகளை வைகை ஆறு பூர்த்தி செய்கிறது.

இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் ஆற்றின் கரையோரம் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. இந்த பகுதியில் இருந்து கமுதி, அபிராமம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் செல்கிறது. தற்போது மணல் குவாரிகளுக்கு அனுமதி அளித்தால் மீண்டும் நிலத்தடிநீர் பாதாளத்திற்கு சென்றுவிட வாய்ப்பு உள்ளது.எனவே மேற்கண்ட மாவட்டங்களில் வைகை கரையோரம் மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கின் குற்றச்சாட்டுகள் சம்பந்தமான ஆவணங்கள் எதுவும் இணைக்கப்படவில்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story