நூதன முறையில் 2 பெண்களிடம் ரூ.9½ லட்சம் மோசடி


நூதன முறையில் 2 பெண்களிடம் ரூ.9½ லட்சம் மோசடி
x

நூதன முறையில் 2 பெண்களிடம் ரூ.9½ லட்சம் மோசடி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை


நூதன முறையில் 2 பெண்களிடம் ரூ.9½ லட்சம் மோசடி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார்

மதுரை வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த 32 வயது பெண்ணின் செல்போன் எண்ணிற்கு வெளிநாட்டில் இருந்து பரிசு விழுந்து இருப்பதாக தகவல் வந்தது. மேலும் அந்த பரிசை பெறுவதற்கு வரி உள்ளிட்ட முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் வந்தது.

இதனை நம்பிய தேவி, பல்வேறு தவணைகளாக ரூ.4 லட்சத்து 11 ஆயிரம் செலுத்தினார். பின்னர் இது மோசடி என்பதை உணர்ந்த அவர், அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து அவர், மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

இதுபோல், பெருங்குடி பகுதியை சேர்ந்த 23 வது பெண் சமூகவலை தளத்தில் வேலை தேடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவரது செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை தொடர்பான ஒரு தகவல் வந்தது. இதனை நம்பிய பல தகவல்களை அனுப்பிய, அந்த பெண்ணிடம் இருந்து ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து அவர், மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எச்சரிக்கை

ஆன்லைனில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என போலீசார் பல முறை எச்சரித்து உள்ளனர். இருப்பினும் இதுபோன்ற மோசடிகள் அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளது. எனவே, நூதன முறையில் ஏமாற்றும் மோசடி கும்பலிடம் பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், ஆன்லைன் தகவல்களை நம்பி பணத்தை செலுத்த வேண்டாம் எனவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story