1,258 வழக்குகளுக்கு தீர்வு


1,258 வழக்குகளுக்கு தீர்வு
x

சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,258 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

சிவகங்கை


சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,258 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் 15 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

முதன்மை மாவட்ட நீதிபதி .சுமதி சாய் பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின் பேகம், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் அனிதா கிரிஸ்டி, சத்திய நாராயணன் மற்றும் வக்கீல்கள் வழக்குகளை விசாரித்தனர்.

1,258 வழக்குகள்

இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 71 குற்றவியல் வழக்கு களும், 86 காசோலை மோசடி வழக்குகளும், 262 வங்கிக் கடன் வழக்குகளும், 198 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், மின்வாரியம் சம்பந்தப்பட்ட ஒருவழக்கும், 37 குடும்பப் பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும் மற்றும் 171 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும் 981 மற்ற குற்றவியல் வழக்குகளும் சேர்த்து மொத்தம் 1,807 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1066 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.3 கோடியே 2 லட்சத்து 24 ஆயிரத்து 399 வரையில் இழப்பீடு கிடைத்தது.

அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட வழக்கு களில் 450 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 192 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 33 லட்சத்து 32 ஆயிரத்து 50 வங்கிகளுக்கு வரவானது. தேசிய மக்கள் நீதி மன்றங்கள் மூலம் மொத்தம் 1,258 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 4 கோடியே 35 லட்சத்து 56 ஆயிரம் 449 பயனாளிகளுக்கு கிடைத்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நிர்வாக உதவியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story