இலங்கைக்கு கடத்த முயன்ற 480 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


இலங்கைக்கு கடத்த முயன்ற 480 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
x

மண்டபம் அருகே வேதாளை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 480 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

மண்டபம் அருகே வேதாளை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 480 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வேதாளை கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்றனர்.

வனத்துறையினரை கண்டதும் கடல் அட்டைகளை கடற்கரையில் போட்டுவிட்டு சிலர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடற்கரையில் சுமார் 480 கிலோ கடல் அட்டைகள் மற்றும் பதப்படுத்துவதற்கு தேவையான பாத்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்து மண்டபம் வனத்துறை அலுவலகத்திற்கு வனத்துறையினர் கொண்டு வந்தனர்.

பறிமுதல்

வேதாளை கடற்கரையில் இருந்து வனத்துறையினர் பறிமுதல் செய்த இந்த கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


Next Story