தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு


தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
x

மது வாங்கி கொடுக்க மறுத்த தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் அடுத்த பாசிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 23). கூலி தொழிலாளி. இவரது நண்பர்கள் விஜய் (24), சந்தோஷ் (22). இவர்கள் 3 பேரும் அச்சமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தனர். பின்னர் மஞ்சுநாதனை மது வாங்கி தருமாறு விஜய், சந்தோஷ் ஆகியோர் கேட்டுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த மஞ்சுநாதனை அவர்கள் 2 பேரும் தாக்கி பீர்பாட்டிலால் குத்த முயன்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story