விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது வழக்கு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசி காட்டு வளைவை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 53). விவசாயி. இவரது மகன்கள் சிலம்பரசன், கவியரசன். இவர்கள் நிலத்தை பிரித்து கொடுக்குமாறு தந்தையிடம் தகராறு செய்து வந்தனர். இந்தநிலையில் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு செல்லலாம் என அண்ணாதுரை சிலம்பரசன் மனைவியை அழைத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தந்தை-மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன், தந்தை அண்ணாதுரையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Related Tags :
Next Story