வழக்கில் பொய் தகவல்களை தெரிவித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை


வழக்கில் பொய் தகவல்களை தெரிவித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
x

வழக்கில் பொய் தகவல்களை தெரிவித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை


மதுரை அருகே பரவை ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த உசிலம்பட்டியை சேர்ந்த முத்தையா, செல்லூர் காசிநாதன் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் சமயநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை 2-வது கூடுதல் போதைப்பொருள் தடுப்பு கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார், சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் முறையாக நிரூபிக்கப்படாததால் 2 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் பல பொய்யான தகவல்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. எனவே, அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் அய்யர் மீது மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 6 மாதத்திற்குள் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் ஓய்வு பெற்றிருந்தால் ஓய்வூதிய விதிகளின் படி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


Next Story