1,366 வழக்குகளுக்கு உடனடி தீர்வு


1,366 வழக்குகளுக்கு உடனடி தீர்வு
x

சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,366 வழக்குகள் முடிக்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது.

சிவகங்கை


சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,366 வழக்குகள் முடிக்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்ட பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், மாநில சட்ட பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 14 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டபணிகள்ஆணைகுழுதலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய் பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி இன்ப கார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின் பேகம், குற்றவியல் நீதிதுறை நடுவர் எண் 1 அனிதா கிரிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் எண் 2 சத்திய நாராயணன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

சமரச தீர்வு

இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 42 குற்றவியல் வழக்குகளும், 123 காசோலை மோசடி வழக்குகளும், 122 வங்கிக் கடன் வழக்குகளும், 113 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 45 குடும்ப பிரச்சினை வழக்குகளும், 251 சிவில் வழக்குகளும், 990 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 1,686 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1,199 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.3 கோடியே, 2 லட்சத்து 55 ஆயிரத்து 330 வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.

அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 361 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 167 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 88 லட்சத்து 76 ஆயிரத்து 510 வரையில் வங்கிகளுக்கு வரவானது. இதன் மூலம் 1,366 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.4 கோடியே 91 லட்சத்து 31 ஆயிரத்து 840 பயனாளிகளுக்கு கிடைத்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story