வாலிபரிடம் ரூ.5 லட்சம் நூதன மோசடி
வாலிபரிடம் ரூ.5 லட்சம் நூதன மோசடி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வங்காருபுரம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் கருப்புராஜா (வயது28). இவர் மருந்தாளுனர் படித்துவிட்டு தென் ஆப்பிரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதனை விட நல்ல வேலைக்கு செல்லலாம் என கருதி தனது விவரங்களை ஆன்லைன் வேலைவாய்ப்பு தளத்தில் பதிவு செய்து வைத்துள்ளார். இந்தநிலையில் அவரின் மெயில் முகவரிக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதில் டென்மார்க் நாட்டில் மருந்தாளுனர் பணி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை பார்த்த கருப்புராஜா அவர்கள் கேட்ட விவரங்களை அனுப்பி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து டென்மார்க் நாட்டில் பிரபல ஆஸ்பத்திரியில் மருந்தாளு னராக தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் அதற்கு விசா கட்டணம், பயண கட்டணம், அறை வாடகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பணம் கேட்டுள்ளனர். அதனை நம்பிய கருப்புராஜா மர்ம நபர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு ரூ.5 லட்சம் அனுப்பி வைத்துள்ளார்.
அந்த பணத்தினை பெற்று கொண்ட நபர்கள் ஏமாற்றிவிட்டு அனைத்து செல்போன் எண்களையும் அணைத்து விட்டார் களாம். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கருப்புராஜா இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ் பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.