நாயை அடித்துக்கொன்ற 3 பேர் மீது வழக்கு


நாயை அடித்துக்கொன்ற 3 பேர் மீது வழக்கு
x

நாயை அடித்துக்கொன்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மதுரை


மதுரை டி.வி.எஸ். நகர் ெரயில்வே சுரங்கப்பாதை அருகே நாய் இறந்து கிடந்தது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விலங்கு நல ஆர்வலர் மயூர் ஹசிஜாவிற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.அதன் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் அந்த நாயை அடித்துக்கொன்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து விலங்கு நல ஆர்வலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நாயை அடித்துக்கொன்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இறந்து கிடந்த நாய் பிரேத பரிசோதனைக்காக தல்லாகுளத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நாய் 40 நாட்கள் கருவுற்றிருந்ததாகவும், நாய்க்கு எந்த வெறியும் பிடிக்கவில்லை எனவும் தெரியவந்தது. நேற்று முன்தினம் சர்வதேச நாய்கள் தினத்தன்று நாய் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story