சூளகிரி அருகே காவலாளியை தாக்கிய விவசாயி மீது வழக்கு


சூளகிரி அருகே  காவலாளியை தாக்கிய விவசாயி மீது வழக்கு
x

சூளகிரி அருகே காவலாளியை தாக்கிய விவசாயி மீது வழக்கு

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே அனாசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 80). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசப்பா (60) என்ற விவசாயி மாந்தோப்பில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டதாக கூறப்படுகிறது. இதனை பெருமாள் கண்டித்ததாக தெரிகிறது. இதில் அவர்கள் 2 பேருக்கு இடையே வாக்குவாதம் முற்றி பெருமாளை, வெங்கடேசப்பா தகாத வார்த்தைகளால் திட்டி மரக்கட்டையால் தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த பெருமாள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் சூளகிரி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வெங்கடேசப்பா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story