ஊத்தங்கரை அருகே டிரைவர் வீட்டை சூறையாடிய 4 பேர் மீது வழக்கு


ஊத்தங்கரை அருகே  டிரைவர் வீட்டை சூறையாடிய 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:15:33+05:30)

ஊத்தங்கரை அருகே டிரைவர் வீட்டை சூறையாடிய 4 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா திப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 51). இவருடைய மகன் சரவணன் (24). வேன் டிரைவர். கடந்த 9-ந் தேதி இவர் வேனை ஓட்டியபோது விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த மல்லிப்பட்டியை சேர்ந்த ரத்தினவேல் என்பவரின் மனைவி சாந்தி (36) படுகாயம் அடைந்து பலியானார். வேனில் இருந்த 9 பயணிகள் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ரத்தினவேல் மற்றும் குரு (38), மணிகண்டன் (31), பெரியசாமி (38) ஆகிய 4 பேரும், திப்பம்பட்டியில் உள்ள சின்னதம்பியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். மேலும் வீட்டின் மேற்கூரை, மோட்டார்சைக்கிளை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பாக சின்னதம்பி ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரத்தினவேல், குரு, மணிகண்டன், பெரியசாமி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே சரவணனின் சகோதரர் குமார், ஏற்கனவே நடந்த விபத்து தொடர்பாக புகார் கொடுத்திருந்த சுண்ணாலம்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவரை வழக்கை வாபஸ் பெறுமாறு கூறினார். அதற்கு வடிவேல் மறுக்கவே, அவரை தாக்கினார். இதுதெடர்பாக வடிவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story