எலக்ட்ரீசியனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


எலக்ட்ரீசியனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Sep 2022 6:45 PM GMT (Updated: 27 Sep 2022 6:45 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.எம்.நகரை சேர்ந்தவர் பாபு (வயது 19). எலக்ட்ரீசியன். அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (32). சம்பவத்தன்று இவர்களது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பாபு, இவருடைய நண்பர்களான பிரவீன்குமார் (19), நாகேஷ் (20) ஆகியோர் தாக்கப்பட்டனர். இதில் காயமடைந்த அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் ஓசூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சுரேஷ், சந்தீப், சிவக்குமார், பசவராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story