சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

தர்மபுரி

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்தனர். இதையடுத்து 2 பேரும் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளதை அறிந்த டாக்டர்கள் இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மகளிர் ஊர்நல அலுவலர் சாந்தி மகேந்திரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் முத்து மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Next Story