சேந்தமங்கலம் அருகேபெண்ணை தாக்கிய விவசாயி மீது வழக்கு


சேந்தமங்கலம் அருகேபெண்ணை தாக்கிய விவசாயி மீது வழக்கு
x
தினத்தந்தி 14 Jan 2023 12:15 AM IST (Updated: 14 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள விட்டமநாயக்கன்பட்டி தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகப்பிரியா (வயது 36). இவருடைய முதல் கணவர் இறந்து விட்டதால் விட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பண்ணன் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஸ்வத் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கருப்பண்ணனுக்கும், சண்முகப்பிரியாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் குடும்ப நல நீதிமன்றம் மூலம் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் சண்முகப்பிரியாவுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்கவும் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஜீவனாம்ச தொகையை கருப்பண்ணன் வழங்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சண்முகப்பிரியா மீண்டும் வழக்கு தொடர்ந்ததால் கருப்பண்ணணுக்கு போலீசார் மூலம் பிடிவாரண்டு போடப்பட்டதாக கூறுப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 6-ந் தேதி சண்முகப்பிரியா 2-வது கணவர் வேலை பார்த்து வந்த முத்துக்காப்பட்டியை சேர்ந்த விவசாயியான மதுசூதனன் என்பவரது தோட்டத்திற்கு சென்றார். அங்கு அவருடைய கணவர் இல்லை. அப்போது மதுசூதனன், சண்முகப்பிரியாவை சாதி பெயரை சொல்லி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து சண்முகப்பிரியா சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மதுசூதன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.


Next Story