சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தொப்பபட்டி முன்சிப் தோட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் குப்புசாமி (வயது 24). இவருக்கும் கோவை மாவட்டம் கணியூர் பகுதியை சேர்ந்த உறவுக்கார 16 வயது சிறுமிக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இதுகுறித்து சைல்டு லைன் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சைல்டு லைன் உறுப்பினர்கள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சைல்டு லைன் சார்பில் ராசிபுரம் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த குப்புசாமி மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குப்புசாமியை தேடி வருகின்றனர்.


Next Story