தலைமை ஆசிரியை மீது வழக்கு


தலைமை ஆசிரியை மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 11:04 AM IST)
t-max-icont-min-icon

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை மீது கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை மீது கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமை ஆசிரியை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள என்.மோட்டூரை சேர்ந்தவர் சுமதி. இவர் ராமச்சந்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இதனிடையே கடந்த ஆண்டு காவேரிப்பட்டணம் வட்டார கல்வி அலுவலர் சபிக்ஜான் ராமச்சந்திரம் தொடக்கப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது தலைமை ஆசிரியை சுமதி தனது 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் வரலாறு மற்றும் புவியியல் பாட மதிப்பெண்களை திருத்தி, போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணிக்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

வழக்குப்பதிவு

இதையடுத்து கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை சுமதியை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். இந்த நிலையில் கல்வி அலுவலர் சபிக் ஜான் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் தலைமை ஆசிரியை சுமதி மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தலைமை ஆசிரியை சுமதி மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story