பாலக்கோட்டில்அனுமதியின்றி நடந்த எருதாட்டம் தொடர்பாக 50 பேர் மீது வழக்கு
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் திருவிழாவையொட்டி போலீசாரின் அனுமதியின்றி எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் மாடு முட்டியதில் 9 பேர் காயம் அடைந்து பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவாப்பட்டியை சேர்ந்த பூசாரி ஆறுமுகம், மேல் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ், புதூர் கிராமத்தை சேர்ந்த ஊர் கவுண்டர் தவமணி, தண்டகாலன் கொட்டாயை சேர்ந்த ஊர் கவுண்டர் சங்கர், செங்கோடபட்டி ஊர் கவுண்டர் புகழேந்தி, கல்கூடப்பட்டி ஊர் கவுண்டர் மாரியப்பன், சித்திரைப்பட்டி ஊர் கவுண்டர் கணேசன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story