நல்லம்பள்ளி அருகேதி.மு.க. கொடியை சேதப்படுத்தியவர் மீது வழக்கு
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி அடுத்த திருப்பதி கொட்டாய் பிரிவு சாலை பகுதியில் தி.மு.க. கொடி கம்பம் உள்ளது. இந்த கொடி கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கொடி அடிக்கடி காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பூர்சன் கொட்டாய் பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்ட தி.மு.க. கொடி கம்பத்தில் இருந்த கட்சி கொடியை எரித்ததோடு, தமிழக முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசியோடு, அந்த வழியாக வந்த முன்னாள் ஊராட்சி தலைவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முக்கல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த தி.மு.க. கிளை செயலாளர் சரவணன் அதியமான்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் தி.மு.க. கொடியை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக பூர்சன்கொட்டாய் பகுதியை சேர்ந்த குமார் (38) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.