அனுமதியின்றி மஞ்சுவிரட்டு; 12 பேர் மீது வழக்கு


அனுமதியின்றி மஞ்சுவிரட்டு; 12 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்ததாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே மின்னமலைப்பட்டி கிராமத்தில் அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த போட்டி அனுமதியின்றி நடந்ததாக கூறி மின்னமலைப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கோமதி உலகம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அப்பகுதியை சேர்ந்த அழகன், செல்வம், அடைக்கன், மற்றொரு அழகன், பெரியழகன், அழகுச்சாமி, அன்பழகன், வேல்முருகன், வள்ளியப்பன், முனியாண்டி, சின்னையா, கணேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story