வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வேறு நபருக்கு மாற்றி அனுப்பிய முன்னாள் அலுவலர் மீது வழக்கு


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வேறு நபருக்கு மாற்றி அனுப்பிய முன்னாள் அலுவலர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வேறு நபருக்கு மாற்றி அனுப்பிய முன்னாள் அலுவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த மகிபாலன் பட்டியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் சிவகங்கையில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்திருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக தொண்டீஸ்வரன் என்பவர் பணிபுரிந்தார். அவர் செந்தில்குமாரின் பதிவு விவரங்களை சென்னை வியாசர்பாடியை சேர்ந்த அபிமன்னன் என்பவருக்கு போலியாக பதிவு மாற்றி அவருக்கு சென்னையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் சமையலர் பணிக்கு பரிந்துரைத்தாராம். இதுகுறித்து விசாரித்த வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள் தொண்டீஸ்வரனை பணியிடை நீக்கம் செய்தனர். மதுரை மண்டல வேலை வாய்ப்பு அலுவலக இணை இயக்குனர் தேவேந்திரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் தொண்டீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.


Related Tags :
Next Story