பாப்பிரெட்டிப்பட்டி அருகேபெண்ணிடம் வரதட்சணை கேட்டு தகராறு; கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு


பாப்பிரெட்டிப்பட்டி அருகேபெண்ணிடம் வரதட்சணை கேட்டு தகராறு; கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 April 2023 12:30 AM IST (Updated: 22 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

ஈரோடு மாவட்டம் செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது 21). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள பட்டுகோனம்பட்டியை சேர்ந்த மதன் என்பவர் கபடி விளையாட வந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் பட்டுகோணாம்பட்டியில் உள்ள கோவிலில் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து கணவன், மனைவி பட்டுகோனம்பட்டியில் உள்ள மதன் வீட்டில் வசித்தனர். அப்போது கார்த்திகாவுக்கு வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக தெரிகிறது. இதையடுத்து மதன் மனைவியை அழைத்து கொண்டு ஊத்தங்கரையில் உள்ள சித்தி பழனியம்மாள் வீட்டுக்கு சென்றார். அங்கு கார்த்திகா, மதனுடைய செல்போனை எடுத்து பார்த்தபோது மதன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மதனிடம் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மதன் தனது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கார்த்திகா பாப்பிரெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி மதன், அவருடைய தாய் மகேஷ்வரி, சித்தப்பா சாமிநாதன், சித்தி பழனியம்மாள் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story