விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
x
கிருஷ்ணகிரி

ஓசூர்:

பேரிகை அருகே பி.சிங்கிரிப்பள்ளியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 32). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை அவருடைய நண்பர் சுனில்குமார் என்பவருக்கு விற்றார். இதனை தொடர்ந்து கடந்த 20-ந் தேதி மாலை அந்த நிலத்தை சமன்படுத்தும் வேலைகளில் ராதாகிருஷ்ணன் உதவி செய்தார். அப்போது அங்கு வந்த அவரது உறவினர்களான ராமன்தொட்டியை சேர்ந்த முனிராஜ் (48), ஆஞ்சப்பா (25), அம்சகிரி (21) மற்றும் மஞ்சுநாத் (32) ஆகிய 4 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராதாகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தகாத வார்த்தைகளில் திட்டி கைகளால் தாக்கினர். மேலும் அங்கிருந்த பொக்லைன் எந்திரத்தையும் சேதப்படுத்தி மிரட்டினர். இதுதொடர்பாக அவர் பேரிகை போலீசில் புகார் செய்ததன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story