பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு


பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 April 2023 12:30 AM IST (Updated: 25 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அருகே உள்ள திப்பிரெட்டி அள்ளியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி லட்சுமி (45). இவர் வீட்டை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த ராஜன் மனைவி சிவகாமி. இவரது வீட்டை சுற்றி சேலையால் வேலி கட்டியுள்ளார். இதுகுறித்து லட்சுமி மகன் கவியரசு தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமி, சிவகாமி ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது சிவகாமி தாக்கியதில் லட்சுமி காயம் அடைந்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் பொம்மிடி போலீசார் சிவகாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story