போக்குவரத்து விதிமீறல்; 20 பேர் மீது வழக்கு


போக்குவரத்து விதிமீறல்; 20 பேர் மீது வழக்கு
x

நாமக்கல்லில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல் பஸ் நிலையம் அருகே நாமக்கல் வடக்கு வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல், நாமக்கல் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஷாஜகான் ஆகியோர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் 2 சக்கர வாகனம் ஓட்டியது உள்பட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பஸ் பயணிகளுக்கு சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதனிடையே சிறுவர்களை வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story