காரிமங்கலம் அருகேநிலத்தகராறில் தம்பி உள்பட 4 பேர் மீது தாக்குதல்3 பேர் மீது வழக்கு


காரிமங்கலம் அருகேநிலத்தகராறில் தம்பி உள்பட 4 பேர் மீது தாக்குதல்3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 April 2023 12:30 AM IST (Updated: 27 April 2023 3:42 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அடுத்த சொட்டான்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 50). இவருடைய அண்ணன் ராஜி (58). இவர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னராஜ், அவருடைய மனைவி மஞ்சுளா (45), மகன் மகாலிங்கம் (21), மகள் காமாட்சி (20) ஆகியோர் அவர்களது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது ராஜி, அவருடைய மனைவி முனியம்மாள் (50), மகன் மாதப்பன் (28) ஆகியோர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் சின்னராஜ், மனைவி மஞ்சுளா, மகன் மகாலிங்கம், மகள் காமாட்சி ஆகியோரை தகாத வார்த்தையால் திட்டியும் கற்கள் மற்றும் தடியால் தாக்கியதில் காயம் ஏற்பட்டது. பின்னர் 4 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சின்னராஜ் கொடுத்த புகாரின்பேரில் ராஜி, மனைவி முனியம்மாள், மகன் மாதப்பன் ஆகியோர் மீது காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story