தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 66 நிறுவனங்கள் மீது வழக்கு-தொழிலாளர்துறை அதிகாரிகள் நடவடிக்கை


தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 66 நிறுவனங்கள் மீது வழக்கு-தொழிலாளர்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் உத்தரவின்பேரில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தொழிலாளர் தினமான நேற்று பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. 37 கடைகளில் ஆய்வு செய்ததில் 23 கடைகளிலும், 51 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 38 உணவு நிறுவனங்களிலும், 11 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 5 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களிலும் என மொத்தம் 99 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 66 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமல் அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி, அதன் நகலினை சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறாமல் பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது. எனவே மேற்கண்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள்) சட்டத்தின்கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தெரிவித்து உள்ளார்.


Next Story