இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு


இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு
x

பென்னாகரம் அருகே இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தர்மபுரி

பென்னாகரம்

பென்னாகரம் அருகே உள்ள ராஜாவூர் காலனி பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் எம்.எஸ்சி. படித்து விட்டு பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சின்னகண்ணு மகன் அஜித்குமார் (23). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்குமார், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏற்காடு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே திருமணம் செய்து கொள்ளலாம் என அஜித்குமாரை வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த மாணவி பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி, காதலித்து ஏமாற்றிய அஜித்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story