மாரண்டஅள்ளி அருகே கல்லூரி மாணவி தற்கொலை:சாலை மறியலில் ஈடுபட்ட13 பேர் மீது வழக்கு


மாரண்டஅள்ளி அருகே கல்லூரி மாணவி தற்கொலை:சாலை மறியலில் ஈடுபட்ட13 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 May 2023 10:00 AM IST (Updated: 30 May 2023 10:05 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே முனுசாமிகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சிவன். இவரது மகள் நதியா (வயது19). இவர் பென்னாகரம் அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து மாணவி அதே கல்லூரியில் படிக்கும் 5-வது மைல்கல் கிராமத்தை சேர்ந்த விஜய்அரசு (20) என்பவருடன் மாரண்டஅள்ளி நிலையத்தில் ஆஜராகி நாங்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். இதனிடையே கடந்த 26-ந் தேதி இரவு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து காதலன் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கல்லால் தாக்கியதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்ததிற்கு காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக சாலை மறியலில் ஈடுபட்ட பன்னீர்செல்வம் (49), சிவன் (48), சக்திவேல் (22), சிதம்பரம் (28), முத்துவேல் (27), அருள் (28) உள்ளிட்ட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.


Next Story