வரதட்சணை கொடுமை; 5 பேர் மீது வழக்கு
வரதட்சணை கொடுமை அளித்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
காரைக்குடி
காரைக்குடி அழகப்பாபுரத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரி (வயது 26). இவரும், நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த முகம்மது சுல்தான் முபாரக் என்ற முகேசும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது லோகேஸ்வரிக்கு 40 பவுன் நகைகளும், ரூ.5 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாம். திருமணம் முடிந்து 3 மாதம் ஆன நிலையில் முகம்மது சுல்தான் முபாரக், மாமனார் ஜாபர் அலி (70) மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் லோகேஸ்வரியை கொடுமைப்படுத்தி மேலும் 100 பவுன் நகைகளும், ரூ.50 லட்சமும் வரதட்சணையாக வாங்கி வர வேண்டும் என துன்புறுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லோகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் முகம்மது சுல்தான் முபாரக், அவரது தந்தை ஜாபர் அலி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்