வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகரை சேர்ந்த பாலமுருகனை முன்விரோதம் காரணமாக சில தினங்களுக்கு முன்பு ரவுடி கொக்கிகுமார் தரப்பினர் அரிவாளால் வெட்டினர்.

மேலும் சூர்யா என்பவரின் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கினர். இதற்கு அதே பகுதியை சேர்ந்த தாஷ்கண்ட் மகன் பழனிகுமார் (வயது 26) உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சூர்யா (24), அரவிந்த் (25), வெட்டுப்பட்ட பாலமுருகனின் சகோதரர் சூர்யா (26), காளீஸ்வரன் (26) ஆகியோர் ரெயில்வே கேட் அருகே பழனிகுமாரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கினார்களாம்.

இதுகுறித்து பழனிகுமார் கொடுத்த புகாரின்பேரில் சூர்யா, அரவிந்த், மற்றொரு சூர்யா, காளீஸ்வரன் ஆகியோர் மீது ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story