குழந்தை திருமணம் செய்த கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு


குழந்தை திருமணம் செய்த கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Jun 2023 7:00 PM GMT (Updated: 18 Jun 2023 7:01 PM GMT)
தர்மபுரி

அரூர்:

அரூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த 1-ந் தேதி முருகன் (வயது 23) என்பவருடன் திருமணம் நடந்தது. தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் விரிவாக்க அலுவலர் சாந்தி இதுதொடர்பாக அரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக முருகன், அவருடைய தந்தை, அண்ணன் மற்றும் சிறுமியின் தாய், பாட்டி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story