தற்கொலைக்கு முயன்ற 2 கவுன்சிலர்கள் மீது வழக்கு


தற்கொலைக்கு முயன்ற 2 கவுன்சிலர்கள் மீது வழக்கு
x

பத்மநாபபுரம் நகரசபை கூட்டத்தில் தற்கொலைக்கு முயன்றதாக 2 பெண் கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

தக்கலை,

பத்மநாபபுரம் நகரசபை கூட்டத்தில் தற்கொலைக்கு முயன்றதாக 2 பெண் கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கவுன்சிலர்கள் தற்கொலை முயற்சி

பத்மநாபபுரம் நகரசபை கூட்டம் கடந்த 31-ந் தேதி நடந்தது. அப்போது தங்கள் வார்டு பகுதிக்கு சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்காததை கண்டித்து 4-வது வார்டு கன்சிலர் மும்தாஜ் (வயது 36), 13-வது வார்டு கவுன்சிலர் சபீனா ஆகியோர் தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தி.மு.க.வை சேர்ந்த நகரசபை தலைவர் அருள் சோபன் தக்கலை போலீசில் புகார் செய்தார்.

2 பேர் மீது வழக்கு

அதில், நகரசபை கூட்டம் நடந்த போது கவுன்சிலர்கள் மும்தாஜ், சபீனா ஆகியோர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை திடீரென அவர்களுடைய உடலில் ஊற்றி தற்கொலை முயற்சி மேற்கொண்டதோடு, உன்னையும் கொளுத்தி விடுவோம் என மிரட்டியதாக தெரிவித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் 2 சுயேச்சை பெண் கவுன்சிலர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story