கோர்ட்டு வளாகத்தில் சுவரொட்டி ஒட்டிய 2 பேர் மீது வழக்கு

திருவாடானை கோர்ட்டு வளாகத்தில் சுவரொட்டி ஒட்டிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
தொண்டி,
திருவாடானை கோர்ட்டு வளாக சுவரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் பட்டினி போராட்டம் நடத்த போவதாக சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அப்போது ரோந்து சென்ற குற்ற தடுப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முகமது சைபுல் கிஷாம் மற்றும் போலீசார் நீதிமன்ற வளாகம் தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் அங்கு ஒட்டப்பட்ட சுவரொட்டியை அகற்றினர். மேலும் இது தொடர்பாக திருவாடானை தாலுகா அழகன் வயல் ஆரோக்கியதாஸ் (வயது 45), வில்லாரேந்தல் சந்தானதாஸ் (50) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





