பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு


பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு
x

திருப்பத்தூரில் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்குப் பதிரு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார் திருப்பத்தூர் கெங்கையம்மன் கோவில் அருகே ஏரிக்கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த திருப்பத்தூர் கோட்டை தெருவை சேர்ந்த கலிபுல்லா (வயது 35), தவுசிக் (27) ஆகியோரை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது கலிபுல்லா, தவுசிக் ஆகிய இருவரும் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலாவை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பத்தூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சிவன்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story