மூதாட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
கோவையில் மூதாட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோயம்புத்தூர்
ரத்தினபுரி
கோவை ரத்தினபுரி தில்லை நகரில் குடும்பத்திடன் வசித்து வருபவர் வசந்தா (வயது60). நெய் வியாபாரி. இவரது சொந்த ஊர் சிவகங்கை. வசந்தா கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரைச் சேர்ந்த இருளாயி (57) என்பவரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கினார். அதை வட்டி, அசலுடன் சேர்த்து செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக அவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் இருளாயி தனது மகளுடன் கோவைக்கு வந்து வசந்தாவிடம் கடனை திரும்ப கேட்டு உள்ளார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இருளாயி, அவரது மகள் முத்துலட்சுமி ஆகியோர் சேர்ந்து வசந்தாவை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் அவர்கள் 2 பேர் மீதும் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story