புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு
x

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர்

வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புன்னம் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் அதன் கடை உரிமையாளர் கவுரி (45), வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அதே பகுதியை சேர்ந்த அசோக்ராஜ் (48) ஆகியோர் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து கவுரி, அசோக்ராஜ் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story