2 பேர் மீது வழக்கு


2 பேர் மீது வழக்கு
x

தொழிலாளியை தாக்கி மோட்டார் சைக்கிளை எடுத்துச்சென்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே உள்ள சீதைக்குறிச்சியை சேர்ந்தவர் பரமசிவன் மகன் கார்த்திக் (வயது 29). கூலித்தொழிலாளி. மேலும் கூலி வேலைக்கு மற்ற நபர்களையும் அழைத்துச் சென்று வருகிறார். அதில், உக்கிரன்கோட்டையைச் சேர்ந்த முருகன் மகன் மகேந்திரன் என்ற குறளி ( 35), மற்றும் தலைமலை மகன் ரமேஷ் (24) ஆகிய இருவரும் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, டாஸ்மாக் பாரில் வைத்து கார்த்திக் மற்றும் மகேந்திரனுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரையும், கார்த்திக் வேலைக்கு அழைத்துச் செல்லவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் மற்றும் ரமேஷ் இருவரும் கார்த்திக்கின் வீட்டுக்குச் சென்று அவரை அவதூறாக பேசியதோடு, அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க வந்த கார்த்திக்கின் தந்தையையும் தாக்கியுள்ளனர். அக்கம்பக்கத்தினர் வரவே, கொலை மிரட்டல் விடுத்தபடி, அங்கு நின்றிருந்த கார்த்திக்கின் மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கார்த்திக் மானூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

1 More update

Next Story