பா.ஜனதாவை சேர்ந்த 200 பேர் மீது வழக்கு


பா.ஜனதாவை சேர்ந்த 200 பேர் மீது வழக்கு
x

பா.ஜனதாவை சேர்ந்த 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் தயாசங்கர். உள்ளிட்ட 3 பேரை பாளையங்கோட்டை போலீசார், அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர்களை வரவேற்க பாளையங்கோட்டை மத்திய சிறை முன்பு பா.ஜனதாவினர் பலர் திரண்டனர். அவர்கள் தயாசங்கர் உள்ளிட்டவர்களை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

இதுகுறித்து குலவணிகர்புரம் கிராம நிர்வாக அலுவலர் குமரன், பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார், உரிய அனுமதி பெறாமல் பொதுவழியில் கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக மாவட்ட பொதுச்செயலாளர் மீராகுமார் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story