தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 221 பேர் மீது வழக்கு
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 221 பேர் மீது வழக்கு
ஈரோடு
அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி பா.ஜ.க.வின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்ததால், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 54 பெண்கள் உள்பட 221 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த அவர்கள் இரவில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வினர் 221 பேர் மீது ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story