ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு


ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x

சேலத்தில் வீடியோ வெளியிட்டு தொழிலாளி தற்கொலை செய்த விவகாரத்தில் ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்

சேலம்:

தொழிலாளி தற்கொலை

சேலம் கல்லாங்குத்து புதூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவர், சின்னசீரகாபாடி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் (தாபா) வேலை பார்த்து வந்தார். கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்த மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் அங்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, மணிகண்டன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒரு வீடியோவை பதிவு செய்து தனது உறவினர்கள், நண்பர்களின் செல்போன்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில், தான் வேலை பார்த்த ஓட்டலில் இருந்து ரூ.5 லட்சம் எடுத்து கொண்டதாக என்னை மிரட்டி எழுதி வாங்கி கொண்டனர். ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரும் அந்த பணத்தை தரவில்லை என்றால் போலீசில் புகார் செய்வோம் என மிரட்டுகிறார்கள் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை பார்த்த உறவினர்கள் இறந்த மணிகண்டனின் உடலை வாங்க மறுத்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 பேர் மீது வழக்கு

இந்தநிலையில், மணிகண்டனின் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் பாலாஜி மற்றும் அசோக், சுரேஷ் ஆகிய 3 பேர் மீது மணிகண்டனை தற்கொலைக்கு தூண்டியதாகவும், எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அவர்கள் 3 பேரும் தலைமறைவாக உள்ளதால் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story