கடன் கொடுக்க மறுத்த வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


கடன் கொடுக்க மறுத்த வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:46 PM GMT)

கடன் கொடுக்க மறுத்த வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 30). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் ரூ.2 ஆயிரம் கடனாக கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீராம், பணம் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, பார்த்திபன், கலையரசி ஆகியோருடன் சேர்ந்து ஸ்ரீராமை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீராம், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story