பணம் வைத்து சூதாடிய 3 பேர் மீது வழக்கு

பணம் வைத்து சூதாடிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரிமளம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக அரிமளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அரிமளம் இ.பி.ஆபீஸ் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீசார் சீட்டு கட்டுகள், பணத்தை பறிமுதல் செய்து 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





