தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
கிணத்துக்கடவு அருகே தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (வயது 22). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று வெள்ளியங்கிரி கிணத்துக்கடவில் வேலைக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன், சிவநேசன், சபரிசன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் வெள்ளியங்கிரியை சரமாரியமாக தாக்கினர். இதுகுறித்த புகாரின், சாமிநாதன், சிவநேசன், சபரிசன் ஆகியோர் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story