அ.தி.மு.க.வினர் 5 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.வினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
கறம்பக்குடி சீனிகடை முக்கம் பகுதியில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்த போலீசார் தடை விதித்து உள்ளனர். இந்நிலையில் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி அ.தி.மு.க.சார்பில் நேற்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் சீனிகடை முக்கம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையா, வடக்கு ஒன்றிய செயலாளர் கணேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், நகர செயலாளர் விவேகானந்தன், அம்புக்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சுமன் காளிதாஸ் ஆகியோர் மீது கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story